Wednesday, October 30, 2013

ஸ்ரீகாலபைரவாஷ்டகம்

சகல செல்வங்களும் பெற தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்




கால பைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம்

க்ஞானமுக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்

லோகமோஹலோபதைன்ய கோபதாபநாசனம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம்



நீதி கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்

காசிவாசி லோகபுண்ய பாப சோதகம் விபும்

நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



பாவங்கள் அழிய தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



அட்டஹாச பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்

த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலம் உக்ரசாஸனம்

அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



வேண்டுவன கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய காலபைரவ மந்திரம்



பானுகோடி பாஸ்வரம் பவாப்தி காரகம் பரம்

நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்

காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



மரணபயம் நீங்கிட தினமும் ஜபிக்க வேண்டிய காலபைரவ மந்திரம்



தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்

வ்யாலக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்

நாரதாதியோகி ப்ருந்த வந்தனம் திகம்பரம்

காசிகா புராதிநாத காலபைரவர் பஜே



மோட்சம் கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்

நிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீலஸத்கடிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



நன்றி:ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் அருளிய ஸ்ரீகாலபைரவாஷ்டகம்

நன்றி:சகஸ்ர வடுகர் ஐயா அவர்களுக்கு

Monday, October 28, 2013

இந்த அஷ்டபைரவ வலைப்பூவை வழிநடத்தும் நமது குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!!!

பைரவப் பெருமானை ஒவ்வொரு நாளும் வழிபட,வழிபட நமது தேவையற்ற பயங்கள் நீங்கும்;நமது பிறவிகளின் எண்ணிக்கை குறையும்;நமது அனைத்து கர்மவினைகளும் பெருமளவு தீரும்;
குலதெய்வ வழிபாடும்,பைரவப் பெருமானின் வழிபாடும் மட்டுமே நமது கலியுக வாழ்க்கைக்கு நிம்மதியையும்,செல்வ வளத்தையும்,சகல அந்தஸ்தையும் தரும்.
இந்த அஷ்டபைரவா வலைப்பூவை நடத்திட நமக்கு ஆசி தருபவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!!!
யாருக்கெல்லாம் முற்பிறவிகளில் பைரவ வழிபாடு இருந்ததோ, அவர்கள் மட்டுமே இந்த வலைப்பூவை வாசிப்பார்கள்;யாருக்கெல்லாம் அவர்களின் தலைவிதியை மாற்றவிருப்பமோ அவர்கள் மட்டுமே திரு.சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திப்பார்கள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!

Thursday, October 24, 2013

பூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவப் பெருமான்!!!




பிரம்மனின் மகன் தட்சன்.தட்சன் தனது மகள் தாட்சாயணியை சிவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க மறுத்தப் பின்னரும்,சிவன்+தாட்சாயணி திருமணம் நடைபெற்றது.இதனால் கோபம் கொண்ட தட்சன் சிவனை அழைக்காமல் வேள்வி செய்தான்.தட்சன் வேள்வியின் அவிர்ப்பாகத்தை சிவனுக்குத் தரவில்லை;ஆனால்,பிரம்மாவோ அவிர்ப்பாகத்தை சிவனின் நந்திக்குக் கொடுத்துவிட்டார்.இதனால் மேலும் ஆவேசமடைந்த தட்சன் மேருவின் வடக்கே புதிய வேள்வி ஒன்றைத்துவங்கினான்.சிவனைத் தவிர,அனைத்து தேவர்களுக்கும்,ரிஷிகளுக்கும் அழைப்பு விடுத்தான்.அனைவருமே இந்த புதிய வேள்வியில் கலந்துகொண்டனர்.

தட்சனின் மகள் தாட்சாயணி அந்த புதிய வேள்விசாலைக்கு வந்து அவிர்ப்பாகத்தை சிவனுக்குத் தராமல் வேள்வி நடத்துவதே தவறு என்று தனது தந்தைக்குச் சுட்டிக்காட்டினாள்.ஆனால்,அனைவரது முன்பாகவும் தனது மகள் தாட்சாயணியை அவமானப்படுத்தினான் தட்சன்.இதனால் வேதனையடைந்த தாட்சாயணி அந்த யாகசாலையில் இருந்த அனைவருக்கும் சாபம் கொடுத்துவிட்டு, யாக குண்டத்தில் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாள்.

இதையறிந்த சிவன் கடும்கோபம் கொண்டார்.வீரபத்திரர் தலைமையில் ஒரு பெரிய படையை அனுப்பி யாகத்தை அழிக்கச் சொன்னார்.
வீரபத்திரரும் யாகம் நடைபெற்றுவந்த இடத்தை சின்னாபின்னப்படுத்தினார்.அங்கே இருந்த அனைவரையும் அடித்து நொறுக்கினார்.இந்திரன்,சந்திரன்,விஷ்ணு,எமன்,அக்னி,வாயு,குபேரன்,   வருணன் என்று அனைவரையும் வதம் செய்தார்;சூரியனின் கன்னத்தில் வீரபத்திரர் ஓங்கி அறைய சூரியனின் பற்கள் கீழே விழுந்தன.இறுதியில் மஹாவிஷ்ணுவின் வேண்டுகோளின் பெயரில் கோபம் தணிந்தார் வீரபத்திரர்.அது சமயம் அங்கே வருகை தந்த சிவன் இறந்தவர்கள் அனைவரையும் மன்னித்து உயிர்ப்பிச்சை அருளினார்.

பற்கள் இழந்த சூரியன் இந்த பாவம் தீர,சிவனிடம் பாவ விமோசனம் கேட்டார்.சிவன் சொன்ன உபதேசம் இது:- கார்த்திகை மாதம் முழுவதும் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமியை வழிபட்டால்,சிவத் துரோகத்தால் ஏற்பட்ட பாவம் போகும்
சூரியன் அதே போல இங்கே வந்து தங்கி கார்த்திகை மாதம் முழுவதும் ஸ்ரீவாஞ்சியம் வந்து தங்கினார்;இங்கே அமைந்திருக்கும் முனிதீர்த்தம் என்ற  குப்த கங்கையில் நீராடி வழிபட்டார்.இதனால்,சிவ அபவாதம் நீங்கியது.
மேலும்,கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கே வந்து வழிபட்டால் பஞ்சமாபாவங்களும் மன்னிக்கப்படும் என்று சிவன் வரம் அருளினார்.

ஸ்ரீயை வாஞ்சித்து பல ஆண்டுகள் மஹாவிஷ்ணு தவம் இருந்ததால் இந்த ஆலயம் ஸ்ரீவாஞ்சியம் என்று பெயர் பெற்றது.ஸ்ரீ என்பது மஹாலட்சுமியின் இன்னொரு பெயர் ஆகும்.

பொன்வண்டு உருவம் எடுத்து,1000 ஆண்டுகள் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஸ்ரீவாஞ்சீசரை வழிபட்டார்.இதனால்,அகமகிழ்ந்த ஸ்ரீவாஞ்சீசரர்,இங்கே இருப்பவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என்று வரம் தந்தார்.ஸ்ரீவாஞ்சீசரின் வாகனம் இங்கே எமதர்மன் ஆவார்.

எனவே,இங்கே வந்து வழிபடுபவர்களுக்கு எமவாதனை,பைரவ உபாதை கிடையாது.கடுமையான ராகு,கேது தோஷங்கள் இருப்பவர்கள் இங்கே வந்து முறைப்படி வழிபட அதிலிருந்து மீள்வார்கள்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் இங்கே வந்து தனது ஜன்ம நட்சத்திர நாட்களில் வழிபட்டால்,பைரவரின் ஆசியையும்,இந்த ஜன்மத்திலும் மறுஜன்மத்திலும் சிறந்த வாழ்க்கையைப் பெறுவார்கள்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பழனி விஜயபைரவர்!!!





அம்பிகை உபாசகராக இருந்த சாதுசுவாமிகள்,இங்கே பைரவச் சக்கரத்தைப் பிரதிட்டை செய்துள்ளார்.சாது சுவாமிகள் திருமடத்தில் சாது சுவாமிகளின் ஆலோசனைக்கு இணங்க ஒரு வாரகாலத்திற்குள் எட்டு அடி உயரமுள்ள விஜயபைரவர் திருமேனியை ஒரு தொழிலதிபர் உருவாக்கினார்.இதனால்,அவரது மனைவியின் உடல்நிலை சீரானது.
பழனி மலையில் ரோப் கார் புறப்படும் இடத்திற்கு எதிர்ப்புறம் சாது சுவாமிகள் மடாலயம் அமைந்திருக்கிறது.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே வந்து ஸ்ரீவிஜயபைரவரை முறைப்படி வழிபட சகல வளங்களையும் பெறுவார்கள்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பாண்டிச்சேரி ஸ்ரீகாலபைரவப் பெருமான்!!!





முண்டகன் என்னும் அரக்கனைக் கொன்ற பாவம் தீர,ஸ்ரீகாலபைரவப் பெருமான் இங்கே சிவலிங்கம் அமைத்து வழிபட்டார்;வடுகன் என்ற பெயர் ஸ்ரீகாலபைரவருக்கு உண்டு.வடுகர் இங்கே வழிபட்டதால் இந்த ஊருக்கு வடுகூர் என்ற பெயர் உண்டானது.இங்கே இருக்கும் தீர்த்தத்திற்கு வடுக தீர்த்தம் என்ற வாமதேவத் தீர்த்தம் என்று பெயர்.வடுகனுக்கு ஆண்ட பிள்ளையார் என்ற பெயர் ஆரம்பத்தில் இருந்தது.அதுவே ஆண்டார் கோவில் என்று மாறிவிட(மருவி விட) அதுவே இந்த ஊரின் பெயராகவும் மாறிவிட்டது.திருஞானசம்பந்தர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்துபாடியிருக்கிறார்.வடுககோலம் என்ற தலைப்பில் பாடப்பட்டிருப்பது இந்த ஆலயத்தைத் தான்!

கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியே ஸ்ரீகால பைரவரின் பிறந்த திதி ஆகும்.எனவே,இதை காலபைரவ அஷ்டமி என்றே அழைக்கிறோம்.

பாண்டிச்சேரியில் விழுப்புரம் டூ பாண்டிச்சேரி சாலையில் கண்டமங்கலம் வழியே செல்லும் பாதையில் திருவாண்டார் கோவில் அமைந்திருக்கிறது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வந்து இராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சகல வளங்களையும்,நலங்களையும் பெறுவர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைரவப் பெருமான்!!!




பூலோகத்திற்கு வந்திருந்த பிரம்மா விஷ்ணுவிடம் தானே வல்லவன்;தனது ஆணையால் தான் விஷ்ணு பூவுலைக் காக்கிறார்;குரூர கர்மத்தினால் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதால் அவர் மேலானவர் அல்ல; என்று வாதிட்டார்.

அப்போது சிம்பு(சிவனின் இன்னொரு பெயர் இது) பார்வதி மற்றும் தனது பாதுகாவலர் காலபைரவப் பெருமானுடன் அவ்விடம் வந்தார்;பிரம்மனின் இந்த திமிரான பேச்சைக் கேட்டு,அவரது ஐந்தாவது தலையைக் கொய்யும்படி காலபைரவப் பெருமானுக்கு ஆணையிட்டார்.அதன்படி,ஸ்ரீகாலபைரவப் பெருமான்,பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார்;அவ்வாறு கொய்தப் பின்னரும்,பிரம்மா உயிரோடு இருந்தார்.தனது அகங்காரம் நீங்கியதால் அவர் பைரவப் பெருமானைத் துதிக்கத் துவங்கினார்.

பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.அது நீங்குவதற்காக,சிம்புவின்(சதாசிவனின்) உத்தரவுப்படி 12 ஆண்டுகள் வரை(ஜோதிடப்படி குரு ஒரு ராசிக்கு மீண்டும் வர ஆகும் காலம்) பல இடங்களில் திரிந்து கபாலத்தில் ரத்தபிட்சை எடுத்துவந்தார்.

ஒரு சமயம்,விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்று பிச்சை கேட்டார்.விஷ்ணு இயன்ற அளவு ரத்த பிட்சை அளித்தும் கபாலம் நிறையவில்லை;எனவே,விஷ்ணு கூறினார்:- நான் பத்து அவதாரங்கள் எடுத்து,ஒவ்வொரு அவதாரத்திலும் எதிரிகளைக் கொன்று அதன் மூலம் போதுமான ரத்தப் பிட்சை அளிப்பேன்
அவ்வாறு ரத்தப் பிட்சை எடுத்து வந்தபோது காவேரி தீர்த்தம் அருகே வந்ததும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.ஸ்ரீகாலபைரவ பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடமே க்ஷேத்திரபாலபுரம் ஆகும்.

ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தோஷம் நீங்கும் இடத்தில் சூலம் கிடைக்கும்;என்று சிம்பு(சதாசிவன்) கூறியிருந்தார்.அதன்படி இங்கே கிடைத்த சூலத்தை எடுத்துக் கொண்டார்.பின்னர் ஸ்வேதவிநாயகரை வணங்கினார்.

இந்த ஊரில் பிறக்கும் மனிதர்களுக்கு ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருள் கிட்டும்;இந்த ஊரில் இறப்பவர்களுக்கு வலது காதில் தாரக மந்திரம் உபதேசித்து யமவாதனை இல்லாமல் செய்யக் கடவாய் என்று அருளினார்.

காசித்தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் காவேரி சங்குமுக தீர்த்தத்தில் ஒரு நாள் நீராடினாலே கிடைக்கும்;க்ஷேத்திரபாலபுரத்தில் ஸ்ரீகால பைரவரை பிரம்மா,இந்திரன்,சக்திகள்,நவக்கிரகங்கள் பூஜித்து பலன் பெற்றனர்.மஹாபாரதத்தில் அர்ஜீனனுக்கு பாசுபத அஸ்திரம் கிடைக்க,அர்ஜீனன் வெகுகாலமாக பைரவ உபாசனை செய்திருக்கிறார்.அதனால்,ஸ்ரீகாலபைரவப்பெருமான் நேரடியாக வந்து பாசுபத அஸ்திரம் பெறும் வழிமுறையை உபதேசித்தார்.

காலை 8 மணிக்குள் காவிரியில் இருக்கும் சங்குமுக தீர்த்தத்தில் நீராட வேண்டும்;பிறகு அதே நாளில் காலை 10.30க்குள் சூலதீர்த்தத்தில் நீராடிவிட்டு,11 மணியில் இருந்து 12 மணிக்குள் ஸ்ரீகாலபைரவரை வழிபட வேண்டும்.இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் வழிபட்டால் தீராத கர்மவினைகளும் தீரும்.பில்லி,ஏவல் முழுமையாக விலகும்.

க்ஷேத்திரபால புரம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை(மாயவரம்) செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த பைரவப் பெருமானை வழிபட பைரவப் பெருமானின் தரிசனமும்,அருளும் கிட்டும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருக்கண்டியூர் வடுக பைரவர்!!!




பல யுகங்களுக்கு முன்பு ஆதி சிவனுக்கு இருந்தது போல,பிரம்மனுக்கும் ஐந்து முகம் இருந்தது;அதனால் கர்வம் கொண்ட பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்யும் படி ஆதி சிவன் தனது அவதாரமான காலபைரவப் பெருமானுக்கு ஆணையிட்டார்.பைரவப் பெருமானும்,கர்வத்துடன் பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார்;அடுத்த தலை உடனே தோன்றியது;இப்படி தொடர்ந்து கிள்ளி கிள்ளி எறிய மொத்தம் 999 தலைகள் தோன்றிக்கொண்டே இருந்தன;1000 வது தலையானது காலபைரவரின் கையில் ஒட்டிக்கொண்டது;அந்தக் கையுடன் தேசாந்திரம் செய்தார்;காசிக்குச் சென்றபோது அன்னபூரணி ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அன்னம் அளித்தாள்;அப்போது அன்னபூரணி(மஹாலட்சுமி அல்ல) ஒரு தந்திரம் செய்தாள்;உலகில் இருக்கும் அத்தனை தானியங்களையும் சேர்த்து உணவாக்கி வீசி எறிய,ஸ்ரீகால பைரவப் பெருமானின் கையில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்மனின் தலை விலகியது.
பிரம்மனின் தலையைக் கொய்த இடமே இந்த திருக்கண்டியூர் ஆகும்.திருக்கண்டியூர் அட்டவீரட்டானங்களில் முதல் வீரட்டனாமாகத் திகழுகிறது.

மேலும்,பொய் சொன்னதால் பூமியில் பிரம்மனை வழிபட மக்கள் மறந்துபோயினர்;கோவில்களில் பிரம்மனது சிலைகள் நிறுவப்படவில்லை;அடுத்தடுத்து பிரம்மபதவிக்கு வந்த பிரம்மன்களில் ஒருவர்,தொடர்ந்து சிவவழிபாடு செய்து இந்த சாபத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்.பிரம்மா தனது வாழ்க்கைத் துணை கலைவாணியோடு மகிழ்ச்சியோடு இருக்கும் ஸ்தலம் இதுவே.

அகங்காரத்தை அழித்து ஆன்மா உய்வு பெற விரும்புவோர் திருக்கண்டியூர் மூலவரை வழிபட வேண்டும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் இங்கே வந்து மூலவருக்கும்,அம்பிகைக்கும் அபிஷேகம் செய்துவிட்டு முடிவாக அந்த நாளின் இராகு காலத்தில் இங்கே வீற்றிருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால்,மரிக்கொழுந்து,அரகஜா போன்றவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.முடிவில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்யும் சிவாச்சாரியருக்கு மனப்பூர்வமான தட்சிணை தர வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூட்டாகவும் இங்கே இந்த வழிபாடு செய்யலாம்;இதன் மூலம் அவர்களின் கர்மவினைகள் கரைந்து வளமான வாழ்வு கிட்டும்.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் அமைந்திருக்கும் காவிரிக்கரையோர கிராமமே திருக்கண்டியூர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ