Monday, October 7, 2013

பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்


கும்பகோணம் அருகே சோழபுரம் உள்ளது. பழைய பெயர் பைரவபுரம் .இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர 
மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.
   
இத்திரு தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட பைரவர் சிலைகள் உள்ளது ,சிவனை வழிபடுவது அஷ்ட நாக சிலை உள்ளது.
இங்கு 64 பீடங்கள் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது ,
ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான், நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார் .

இத்தல ஸ்ரீ பைரவேஷ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்,
இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது 

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம்/தியானம்  செய்துள்ளார்.
ஆதி சங்கரர் தவத்தினால்(தியானத்தினால்) ஏற்பட்ட தலை பாரத்தையும்,உடல் வெப்பத்தையும் தணிக்க இங்கே வந்து தவம் செய்தார்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள்.
இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.

தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment