Friday, March 7, 2014

இப்பிறவியிலேயே முக்தி கிட்டிட நாம் என்ன செய்ய வேண்டும்?





ஒரு துறவி குளக்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்;அப்போது மீன்கள் நீரின் மேல் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்;திடீரென அந்த இடத்திற்கு வந்த கழுகு கண் இமைக்கும் நேரத்தில் நீரில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மீனைக் கவ்விக் கொண்டு செல்வதை பார்த்தார்;அப்போது அவருக்கு ஞானம் பிறந்தது.
அந்த மீனைப் போல பக்தி என்னும் கடலில் மேலோட்டமாக இருந்தால் மீனுக்கு ஏற்பட்ட கதிதான் தனக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்தார்.எனவே, ஆழமான பக்திக்குச் சென்று பைரவப் பெருமானைச் சரணாகதி அடைந்தால் இப்பிறவியிலேயே முக்தி பெற முடியும் என்று நம்பினார்.அந்த நம்பிக்கையை ஒவ்வொரு நிமிடம் தோறும் வளர்த்து எடுத்து,ஒரே பிறவியில் பைரவ தரிசனமும் பெற்றார்;


ஆழமான பக்தியைப் பெற வயிறு நிறையச் சாப்பிடுதல்,தேவையில்லாத பேச்சு பேசுதல்,அடுத்தவரைப்பற்றி புறங்கூறுதல்,வம்பு பேசுதல்,தேவைக்கும் அதிகமாக பணம் சேர்த்தல்,அதை மேலும் மேலும் பெருக்குவதற்காக மட்டுமே சிந்தித்தல்;ஒழுக்கக் கட்டுப்பாடுவிதிகளை அதன் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் போன்ற விஷயங்களைத் தவிர்த்தாலே படிப்படியாக ஆழ்ந்த பக்தி மனதினுள் உருவாகிவிடும்.


வங்காள மொழியில் ஒரு பழமொழி உண்டு; நீங்கள் செய்யும் அனைத்து ஆன்மீகச் செயல்களும் மரண நேரத்தில் சோதிக்கப்படும்;மரண நேரத்தில் இறைவனை நினைவு கூர்ந்தால் வெற்றி நம் பக்கம்;
எனவே,நாம் ஒவ்வொருவரும் மரண பயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு ஆன்மீகத் தொண்டில் ஆழமாகச் செல்ல பைரவப் பெருமானைத் தஞ்சமடைவோம்.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

1 comment:

  1. அன்புடன்/ வை.பூமாலை. சுந்தரபாண்டியம்

    நன்று

    ReplyDelete