Monday, March 24, 2014

பைரவ விழாக்களில் முக்கியமானது சம்பா சஷ்டி!





தற்காலத்தில் தொலைக்காட்சி,ஆன்மீகச் சொற்பொழிவுகளில் சிவனுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள்;விநாயகர்,முருகர்,ஐயப்பன்,வீரபத்திரர்,பைரவர் =இவர்கள் அனைவருமே சிவனின் குழந்தைகள் என்று திரித்துச் சொல்கிறார்கள்;இதைவிட முட்டாள்த்தனம் வேறு இல்லை;

சிவனின் குழந்தைகள் விநாயகரும்,முருகக் கடவுளுமே! சிவனின் அவதாரமாக இருப்பவர்கள் பைரவப் பெருமானும்,வீரபத்திரரும்.

முன்னொரு காலத்தில் மணி,மல்லன் என்ற இரு அசுரர்கள் மக்களுக்கும்,முனிவர்களுக்கும் துன்பம் கொடுத்து வந்தனர்;முனிவர்கள் படைப்புக்கடவுளாகிய பிரம்மாவிடம் முறையிட்டனர்;அவரோ திருமாலிடம் முறையிட்டார்;இருவரும் சதாசிவனிடம் சென்று முறையிட்டனர்;சதாசிவன் தனது அம்சமான மார்த்தாண்ட பைரவரை ஏவினார்;மார்த்தாண்ட பைரவர் குதிரை மீது ஏறி போருக்குக் கிளம்பினார்;குதிரை  மீது அமர்ந்தவாறே சூலாயுதத்தால் மணி,மல்லன் இருவரையும் கொன்றொழித்தார்;இந்த வரலாறு பிரம்மாண்டபுராணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.மார்கழி மாதம் சுக்லபட்சம் “ஐந்து நாள் நவராத்திரி விழா” சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இதனையே சம்பா சஷ்டி என்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் மல்லாரி என்ற இடத்தில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

1 comment:

  1. நல்ல விளக்கம்
    இருப்பினும் பைரவர் பிறப்பு பற்றி குறிப்பு கீழ்கண்ட வாறு படித்துள்ளேன் பைரவர் பிறப்பு :

    அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர்
    பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

    தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான்.

    உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
    பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்
    டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத்
    துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள்
    உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்

    ReplyDelete